UPDATED : நவ 21, 2026 07:35 PM
ADDED : நவ 21, 2026 07:35 PM

அ நிறம் | அளவு
ஆர்.எஸ்.புரம்: இங்கு எஸ்.எம்.ஜூவல்லரி கிராப்ட் என்ற பெயரில் தங்க நகை பட்டறை செயல்பட்டு வருகிறது.
இங்கு ஆர்டரில் நகை தயாரிக்கப்பட்டு கடைகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 10க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர். இங்கு 640 கிராம் தங்கம் திருட்டுபோனதாக உரிமையாளர் ஸ்மித்தேஸ் ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கையில், நகை பட்டறையில் வேலை செய்த 3 பேர் சேர்ந்து திருடியது தெரிந்தது. இது தொடர்பாக ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த பாபு,35 நேற்று கைது செய்யப்பட்டார். 500 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவான மேற்கு வங்கத்தை சேர்ந்த மருபில்லா காஷி,21 மற்றும் ஒருவரை தேடி வருகின்றனர்.
