/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுமி தற்கொலை; போலீசார் விசாரணை
/
சிறுமி தற்கொலை; போலீசார் விசாரணை
ADDED : ஜூலை 16, 2025 08:50 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, 16 வயது சிறுமி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து, ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
பொள்ளாச்சி அருகே, கெட்டிமல்லன்புதூரை சேர்ந்த, 16 வயது சிறுமி, பத்தாம் வகுப்பு முடித்து, தனியார் மருத்துவமனையில் நர்சிங் கோர்ஸ் அட்மிஷன் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சிறுமி நேற்று காலை, அறை கதவை திறக்கவில்லை. சந்தேகமடைந்த பெண்ணின் தாய், அருகில் வசிப்போர் உதவியுடன், கதவை திறந்து பார்த்த போது, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுபற்றி ஆனைமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த ஆனைமலை போலீசார், சிறுமியின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், சிறுமி தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.