/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பட்டா கொடுங்க; பொழச்சுட்டு போறோம் : கலெக்டரிடம் உப்பிலி திட்டு மக்கள் மனு
/
பட்டா கொடுங்க; பொழச்சுட்டு போறோம் : கலெக்டரிடம் உப்பிலி திட்டு மக்கள் மனு
பட்டா கொடுங்க; பொழச்சுட்டு போறோம் : கலெக்டரிடம் உப்பிலி திட்டு மக்கள் மனு
பட்டா கொடுங்க; பொழச்சுட்டு போறோம் : கலெக்டரிடம் உப்பிலி திட்டு மக்கள் மனு
ADDED : பிப் 13, 2024 12:24 AM

கோவை;பொதுமக்களிடம் குறைகேட்கும் கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. டி.ஆர்.ஓ., ஷர்மிளா, மனுக்களை பெற்று, துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரைத்தார்.
மொத்தம், 469 மனுக்கள் பெறப்பட்டன. கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கோகிலா, சமூக பாதுகாப்பு திட்ட தனி அலுவலர் சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
பட்டா கொடுக்கலை
போத்தனுாரை சேர்ந்த சூர்யா தலைமையில் வந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், 'மதுக்கரை தாலுகா, குறிச்சி, உப்பிலி திட்டு பகுதியில், 50 ஆண்டுகளாக, 200 குடும்பத்தினர் வசிக்கிறோம்.
அரசாங்கத்திடம் இருந்து எங்களுக்கு ஆதார் அட்டை, மின் இணைப்பு, ரேஷன் கார்டு, வீட்டு வரி, சமையல் காஸ் இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
ஆனால், பலமுறை மனு கொடுத்தும் பட்டா மட்டும் கிடைக்கவில்லை. எங்கள் பகுதியில் க.ச.எண்: 149க்கு பட்டா வழங்கியதை மேற்கோள் காட்டி, மீதமுள்ள குடும்பத்துக்கும் வழங்க வேண்டும்' என, கூறியுள்ளனர்.
சின்னப்பா தேவர் பெயர் சூட்டுங்க!
ஒரு தாய் மக்கள் கட்சி பொது செயலாளர் ராஜ்கிருஷ்ணா கொடுத்த மனுவில், 'ராமநாதபுரம் திருச்சி ரோடு ஒலம்பஸ் பகுதியில் இருந்து நஞ்சுண்டாபுரம் ரோட்டில் ஸ்ரீபதி நகர் வரை ஒரு கி.மீ., துாரம் வரை, 80 அடி ரோடு என அழைக்கப்படுகிறது.
தேவர் பிலிம்ஸ் அதிபர், சாண்டோ சின்னப்பா தேவர் பிறந்து, வசித்த இடம். கோவை மாவட்டத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில், சேவை செய்தவர்.
சம்பாதித்த பணத்தில் கோவில் திருப்பணிகளுக்கு செலவழித்தவர். அவரின் நினைவாக, 'சாண்டோ சின்னப்பா தேவர் சாலை' என பெயரிட வேண்டும்' என கூறியுள்ளார்.
மலையேற அனுமதிக்கணும்
பாரத் சேனா மாநில துணை தலைவர் ருத்ரம் முத்து கொடுத்த மனுவில், 'தென்கயிலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலையின் உச்சியில் வீற்றிருக்கும் சிவனை, பிப்ரவரி முதல் மே வரை, பக்தர்கள் மலையேறிச் சென்று தரிசிப்பர். மலையேறுவதற்கு இன்னும் நடை திறக்கவில்லை.
இது, வெள்ளியங்கிரி மலை அடியார்களுக்கு மன வேதனையாக இருக்கிறது. மலையேறுவதற்கு உடனடியாக அனுமதி தர வேண்டும்' என கூறியுள்ளார்.
வீட்டை மீட்டுக் கொடுங்க
ஒண்டிப்புதுாரை சேர்ந்த பழனியம்மாள், 74 கொடுத்த மனுவில், 'எனது தந்தை ரங்கண்ணன், எனது ஜீவனாம்சத்துக்கு எழுதிக்கொடுத்த வீட்டை, மூத்த மகன் சிவராஜ் அபகரித்துக் கொண்டு, என்னை விரட்டி விட்டான்.
இளைய மகன் பாலகிருஷ்ணன் வீட்டில் வசித்து வருகிறேன். அவன், உடல் நலம் பாதிக்கப்பட்டு இருக்கிறான். எனது வாழ்வாதாரத்துக்கு வேறு வழி இல்லாத சூழல் இருக்கிறது; எனது வீட்டை மீட்டுத்தர வேண்டும்' என கூறியிருக்கிறார்.