/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விளம்பர கூடாரமாக மாறிய: கண்ணாடி மாளிகை
/
விளம்பர கூடாரமாக மாறிய: கண்ணாடி மாளிகை
ADDED : ஏப் 18, 2025 11:09 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வால்பாறை: வால்பாறையில், விதிமுறையை மீறி அரசு கட்டடத்தில் வைக்கப்பட்ட விளம்பர பேனர்களை அகற்ற வேண்டும்.
வால்பாறை காந்திசிலை வளாகத்தில் அமைந்துள்ள கண்ணாடி மாளிகை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் இடிக்கப்பட்டு, புதியதாக கட்டுவதற்கு நகராட்சி சார்பில் திட்டமிடப்பட்டது.
அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதால், கண்ணாடி மாளிகை கட்டும் பணி பாதியில் கைவிடப்பட்டது. இந்நிலையில், இந்த கட்டத்தில் மேல் பகுதியில் தி.மு.க.,வினர் நிரந்தரமாக விளம்பர பேனர்கள் வைத்துள்ளனர்.
விதிமுறையை மீறி அரசு கட்டடத்தில் வைக்கப்பட்ட விளம்பர பேனர்களை அகற்ற வேண்டும், என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

