/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குளோபல் ஸ்டார்ட் அப் உச்சி மாநாடு 2025
/
குளோபல் ஸ்டார்ட் அப் உச்சி மாநாடு 2025
ADDED : செப் 27, 2025 12:51 AM

கோவை; புதிய தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லுாரி, ஸ்டார்ட் அப் தமிழ்நாடு இணைந்து, குளோபல் ஸ்டார்ட் அப் உச்சி மாநாடு 2025 குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை, கல்லுாரி வளாகத்தில் நடத்தியது.
கல்லுாரி முதல்வர் சவுந்தர்ராஜன் வரவேற்றார். எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுந்தர், விழாவுக்கு தலைமை வகித்து, புத்தாக்கம் சார்ந்த முயற்சிகளை வளர்ப்பதில் நிறுவனத்தின் அர்ப்பணிப்பு குறித்து உரையாற்றினார்
சிறப்பு விருந்தினராக, தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் அமைச்சர் அன்பரசன், கல்லுாரி மாணவர்கள் பங்கேற்ற, 'புதுமையில் ஒற்றுமை - மனித உருவாக்கம்' என்ற ரோடு ஷோவை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அமைச்சகம் நடத்திய, எம்.எஸ்.எம்.இ. ஐடியா ஹேக்கத்தான் போட்டியில், 75 லட்சம் ரூபாய் பரிசு பெற்ற மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் பரிசு வழங்கி கவுரவித்தார்.
நிகழ்ச்சியில், அரசு கூடுதல் தலைமை செயலாளர் அதுல் ஆனந்த், ஸ்டார்ட் அப் டிஎன் இயக்குனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான சிவராஜா ராமநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.