தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/நாளை மாலை சூர சம்ஹாரம் மருதமலையில் கோலாகலம்

நாளை மாலை சூர சம்ஹாரம் மருதமலையில் கோலாகலம்

நாளை மாலை சூர சம்ஹாரம் மருதமலையில் கோலாகலம்


UPDATED : நவ 14, 2026 05:07 PM

ADDED : நவ 14, 2026 04:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 14, 2026 05:07 PM ADDED : நவ 14, 2026 04:34 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மருதமலை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில், நாளை(நவ.15) சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது.

கந்த சஷ்டி விழா, 10ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நாள்தோறும் யாகசாலை பூஜைகள், அபிஷேக பூஜை, திருவீதி உலா நடந்தது. கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான, சூர சம்ஹாரம் நாளை மாலை 3 மணிக்கு நடக்கிறது.

ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, நாளையும், நாளை மறுநாளும் அடிவாரத்தில் இருந்து மலைமேல் செல்ல வாகனங்களுக்கு அனுமதி இல்லை.

அடிவாரத்தில் 10 இடங்களில் பார்க்கிங் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு வாகனங்களை நிறுத்திவிட்டு, கோயில் பஸ் மூலமும், படிக்கட்டு பாதை மூலமும் மலையேறி கோயிலுக்கு செல்லலாம். இன்று, 340 போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us