தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பெண்கள் வெயிட் போடுவது ஏன்?

பெண்கள் வெயிட் போடுவது ஏன்?

பெண்கள் வெயிட் போடுவது ஏன்?


UPDATED : நவ 14, 2026 04:33 PM

ADDED : நவ 14, 2026 04:28 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 14, 2026 04:33 PM ADDED : நவ 14, 2026 04:28 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: பெண்களுக்கு உடல் எடை அதிகரிப்பதற்கான காரணங்கள் என்ன என்று பார்த்தால், தவறான உணவு பழக்கம் நம்பர் 1 காரணம் என்று தெரியும்.

இனிப்புகளை அதிகம் சேர்த்துக்கொள்வது, பதப்படுத்திய உணவுகளை சாப்பிடுவது, குளிர்பானங்கள் குடிப்பது, எண்ணெய் மற்றும் கொழுப்பு அதிகமுள்ள உணவுகளை சாப்பிடுவது, தேவைக்கு அதிகமாக சாப்பிடுவது, வீணாக போகிறதே என்ற ஆதங்கத்தில் குப்பைக்கூடைக்கு போக வேண்டியதை வயிற்றுக்கு திசை திருப்புவது ஆகியவை தவறான உணவுப் பழக்கங்கள் என்ற லிஸ்டில் வரும்.

அடுத்தது வாக்கிங் போன்ற எந்த உடற்பயிற்சியும் இல்லாதது, ஒரே இடத்தில் அதிக நேரம் இருப்பது. ”வீட்டுக்குள்ளேயே அங்குமிங்கும் ஆயிரம் தடை நடக்கிறேன்; அதைவிட என்ன பெரிய வாக்கிங், உடல் பயிற்சி?” என்று கேட்பது தவறான புரிதல். சதா மொபைல் போன் பார்த்துக்கொண்டே இருப்பதும் உடல் எடை அதிகரிக்க காரணம் என்றால், நம்புவதற்கு மனசு வராது. ஆனால், அது உண்மை.

அட்லீஸ்ட், சாப்பிடும்போது மட்டுமாவது போன் திரையை பார்க்காதீர்கள். அதர்கு பதில் டிவி திரைக்கு மாறிவிடாதீர்கள். சாப்பிடும்போது சாப்பாடு மீது மட்டும் தான் கவனம் இருக்க வேண்டும். மெதுவாக ரசித்து ருசித்து சாப்பிடுங்கள்.

இதுபோன்ற எந்த காரணமும் இல்லாமல் மரபியல் காரணத்தால் மட்டுமே உடல் எடை அதிகரிக்கலாம் என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் தாரா ஜெயஸ்ரீ.

ஹார்மோன் மாற்றங்கள், தைராய்டு சுரப்பியின் செயல்பாடு குறைதல், பி.சி.ஓ.டி., இன்சுலின் எதிர்ப்புத் தன்மை மற்றும் மாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் மூலமாகவும் உடல் எடை அதிகரிக்கிறது.

தூக்கமின்மையும் ஒரு காரணமாகும். இதனால் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படலாம். படிப்பு, வேலை, குடும்ப பிரச்னைகள், மனஅழுத்தம், பதற்றம் போன்ற காரணங்களால் பெண்கள் அதிகமாக சாப்பிடுவது வழக்கம். இதுவும் உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கிறது.

எடை அதிகரிக்கும்போது இன்சுலின் எதிர்ப்பு ஏற்படலாம். உணவில் உள்ள சர்க்கரையை உடல் பயன்படுத்துவதற்கு இன்சுலின் உதவுகிறது. அது சரியாக செயல்படாதபோது உடலில் சர்க்கரையின் பயன்பாடு பாதிக்கப்படுவதுடன், எடை அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது.

அனைத்து பி.சி.ஓ.டி. பாதிப்புள்ள பெண்களும் உடல் பருமனுடன் இருப்பதில்லை. வயிறு, தொடை, இடுப்பு பகுதிகளில் கொழுப்பு சேர்வது, மாதவிடாய் சுழற்சி ஒழுங்காக இல்லாதது போன்றவை பி.சி.ஓ.டி. பாதிப்புடன் தொடர்புடையவையாக இருக்கலாம். இதனால் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், கரு தரிப்பதில் சிக்கல், மூட்டு வலி, இதய நோய், மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

box

என்ன செய்தால் குறைக்கலாம்?

ஆயுர்வேத முறையின்படி, உத்வர்தனம் எனப்படும் சில மூலிகைப் பொடிகளைப் பயன்படுத்தி உடலுக்கு மசாஜ் செய்வது வழக்கம். இதனை மருத்துவரின் மேற்பார்வையில் செய்வதன் மூலம் உடல் எடையைக் குறைக்க உதவலாம் என்கிறார் டாக்டர். மூலிகை நீராவி சிகிச்சையும் கிடைக்கிறது.

வியர்வை மூலம் உடல் எடையை குறைக்க முயற்சி செய்வதால் கொழுப்பு குறையாது. உடலில் உள்ள நீர்ச்சத்து மட்டுமே தற்காலிகமாக குறையும்.

செரிமானத்தை மேம்படுத்துவதும் எடை குறைப்புக்கான ஒரு வழி. இஞ்சி, சீரகம், கொத்தமல்லி தவறாமல் சேர்த்தால் பலன் கிட்டும்.

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகியவற்றின் பொடியும் செரிமானத்தை மேம்படுத்தவும், எடையை குறைக்கவும் பயன்படுகிறது. சீரக தண்ணீர் குடிப்பது, இஞ்சி - எலுமிச்சை சாறு, நெல்லிக்காய் சாறு பருகுவதும் நல்லது. நெல்லிக்காய் போலவே வெந்தய தண்ணீரில் உள்ள நார்ச்சத்தும் எடை குறைக்க உதவுகிறது.

முருங்கைக்கீரை, சிறுகீரை, பசலைக்கீரை போன்ற கீரைகளை தவிர்க்காமல் சாப்பிடுவதும், புரதம் நிறைந்த உணவுகளை தினமும் சாப்பிடுவதும் எடை குறைக்க உதவும். பார்லி தண்ணீர் குடிப்பது, யோகா பயிற்சி, சூரிய நமஸ்காரம், பிராணாயாமம் போன்றவற்றைச் செய்வதும் உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவும் என்கிறார் டாக்டர்.

மதுஸ்ரீ

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us