/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வனபத்ரகாளியம்மன் கோவில் உண்டியலில் தங்கம், வெள்ளி
/
வனபத்ரகாளியம்மன் கோவில் உண்டியலில் தங்கம், வெள்ளி
ADDED : ஜூன் 30, 2025 11:20 PM
மேட்டுப்பாளையம்; கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் வளாகத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது.
கோவை ஹிந்து சமய அறநிலைத்துறை உதவி கமிஷனர் இந்திரா தலைமையிலும், வனபத்ரகாளியம்மன் கோவில் உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி, மேட்டுப்பாளையம் கோவில்களின் ஆய்வாளர் ஹேமலதா ஆகியோர் முன்னிலையிலும், உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டன.
இதில் கோவில் பணியாளர்கள், பக்தர்கள் ஆகியோர் பங்கேற்றனர். 22 உண்டியல்களில், 8 லட்சத்து, 19 ஆயிரத்து, மூன்று ரூபாயும், இரண்டு தட்டு உண்டியல் காணிக்கைகள் எண்ணியதில், 5 லட்சம், 92 ஆயிரத்து, 332 ரூபாய் இருந்தது. மேலும் தங்கம், 12 கிராமமும், வெள்ளி, 79 கிராமமும் இருந்தது.