ADDED : டிச 04, 2024 09:57 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; தென்மாநில அளவிலான வலுதுாக்கும் போட்டி, சேலத்தில் நடந்தது. தமிழகம் சார்பில் பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லுாரி மாணவர் கருப்புசாமி, 66 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்றார்.
ஸ்குவாட் முறையில், 262.5 கிலோ எடை; பெஞ்ச் பிரஷ் முறையில், 115 கிலோ எடை; டெட்லிப்ட் முறையில் 237.5 கிலோ எடை, என, 615 கிலோ எடையைத் துாக்கி தங்கப்பதக்கம் வென்றார்.
இவரை, கல்லுாரித்தலைவர் சேதுபதி, துணைத்தலைவர் வெங்கடேஷ், செயலாளர் விஜயமோகன், முதல்வர் வனிதாமணி, உடற்கல்வி இயக்குனர் பாரதி உள்ளிட்டோர் வாழ்த்தினர்.