/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பட்டுக்கூடுக்கு நல்ல விலை; விவசாயிகள் சந்தோஷம்
/
பட்டுக்கூடுக்கு நல்ல விலை; விவசாயிகள் சந்தோஷம்
ADDED : ஜன 20, 2025 11:25 PM

கோவை; பட்டுக்கூடுக்கு நல்ல விலை கிடைப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை பாலசுந்தரம் ரோட்டில், பட்டு வளர்ச்சித்துறையின் பட்டுக்கூடு விற்பனை அங்காடி உள்ளது. இங்கு கோவை, திருப்பூர், ஈரோடு, கோபி, உடுமலை, திண்டுகல் மற்றும் தேனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, விவசாயிகள் பட்டுக்கூடுகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
மாதம், 25 முதல் 30 டன் வரை விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. பனி பொழிவு காரணமாக, உற்பத்தி குறைந்து இருந்தாலும், நல்ல விலை கிடைக்கிறது.
தொடர்ச்சியாக மழை பெய்த போது, பட்டுக்கூடு ஊற்பத்தி குறைந்து, விலையும் வீழ்ச்சி அடைந்தது. ஆனால் டிசம்பருக்கு பிறகு, பனிப்பொழிவு காரணமாக பட்டுக்கூடு உற்பத்தி குறைந்து இருந்தாலும், விலை குறையவில்லை. கடந்த இரண்டு மாதங்களாக, நல்ல விலை கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
நேற்று தரமான கூடு கிலோ, 667 ரூபாய்க்கும், அடுத்த தரம் 435 ரூபாய்க்கும் விற்பனையானது. விவசாயிகள் கூறுகையில், 'கிலோவுக்கு ரூ.500க்கு மேல் விலை கிடைத்தாலே போதும்; நஷ்டம் இருக்காது' என்றனர்.

