/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது
/
தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது
ADDED : செப் 07, 2025 09:26 PM

அன்னூர்; அன்னூர் அருகே, முடுக்கன் துறை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் அமுதா, நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 5ம் தேதி சென்னையில் நடந்த விழாவில், கல்வி அமைச்சர் மகேஷ், தலைமை ஆசிரியை அமுதாவுக்கு நல்லாசிரியர் விருது வழங்கினார். வட்டார கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள், பள்ளி கல்வி குழு நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர்.
தலைமையாசிரியர் அமுதா கூறுகையில், ''இப்பள்ளியில் நான் பொறுப்பேற்கும்போது, 10 மாணவர்கள் மட்டும் படித்து வந்தனர். எட்டு ஆண்டு முயற்சியில் தற்போது 35 மாணவர்கள் இப்பள்ளியில் படிக்கின்றனர். இப்பள்ளி சிறந்த பள்ளிக்கான விருது பெற்றுள்ளது. இப்பள்ளி மாணவர்கள் வட்டார அளவிலான போட்டிகளில் சாதித்துள்ளனர்,'' என்றார்.