/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விதை பண்ணையில் நல்ல மகசூல்; விவசாயிகளுக்கு பாராட்டு
/
விதை பண்ணையில் நல்ல மகசூல்; விவசாயிகளுக்கு பாராட்டு
விதை பண்ணையில் நல்ல மகசூல்; விவசாயிகளுக்கு பாராட்டு
விதை பண்ணையில் நல்ல மகசூல்; விவசாயிகளுக்கு பாராட்டு
ADDED : ஜூலை 13, 2025 08:49 PM

சூலுார்; தொழில் நுட்பங்களை கடைபிடித்து, விதைப்பண்ணைகள் அமைத்து அதிக மகசூல் பெற்றுள்ள விவசாயிகளை, விதை சான்று மற்றும் அங்கக சான்று துறை உதவி இயக்குனர் மாரியப்பன் பாராட்டினார்.
விதைச்சான்று மற்றும் அங்கக சான்று துறை உதவி இயக்குனர் மாரியப்பன், சூலுார் மற்றும் பொள்ளாச்சி வடக்கு வட்டாரத்தில் உள்ள, கே -12 சோள ரக விதைப் பண்ணைகளில் ஆய்வு மேற்கொண்டார்.
பட்டணத்தை சேர்ந்த விவசாயிகளின் பண்ணைகளை ஆய்வு செய்து, கடைபிடித்த தொழில்நுட்பங்கள் குறித்து கேட்டறிந்தார்.
'விதைப்பண்ணை அமைக்கும் முன் நிலத்தை சட்டி கலப்பை கொண்டு உழவு செய்யவேண்டும். ஒரு எக்டருக்கு, ஒன்பது டன் குப்பை எரு இட்டு, உழவு செய்ய வேண்டும். பின் கொத்து கலப்பை கொண்டு உழுதுவிட்டு, தானிய நுண்ணூட்டம், எக்டருக்கு, 12.5 கிலோ அடி உரமாக இடவேண்டும்.
ஒரு வாரம் கழித்து, விதையை அசோஸ்பைரில்லம் பாஸ்போ பாக்டீரியா கொண்டு விதை நேர்த்தி செய்து, விதைப்பு எந்திரத்தால் விதைக்க வேண்டும். நான்கு நாட்களுக்குள் களைக்கொல்லி அடிக்க வேண்டும். வாரம் இரு முறை நீர்ப்பாசனம் செய்து, உதவி விதை சான்று அலுவலர்களின் அறிவுறுத்தல் படி தொழில்நுட்பங்களை கடைபிடித்ததால், பயிர் நல்ல முறையில் வளர்ந்துள்ளது' என, விவசாயிகள் கூறினர். அவர்களுக்கு, பாராட்டு தெரிவித்தார்.
விதை அலுவலர்கள் நந்தினி, துளசி மணி, செல்வி பிரியா, உதவி விதை அலுவலர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.