/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தினமும் இரு வேறு கணக்குகள் சமர்ப்பிப்பு திணறும் அரசு பஸ் கண்டக்டர்கள்
/
தினமும் இரு வேறு கணக்குகள் சமர்ப்பிப்பு திணறும் அரசு பஸ் கண்டக்டர்கள்
தினமும் இரு வேறு கணக்குகள் சமர்ப்பிப்பு திணறும் அரசு பஸ் கண்டக்டர்கள்
தினமும் இரு வேறு கணக்குகள் சமர்ப்பிப்பு திணறும் அரசு பஸ் கண்டக்டர்கள்
ADDED : அக் 14, 2025 12:24 AM
பொள்ளாச்சி;'நெட்ஒர்க்' மற்றும் 'பேட்டரி ஸ்டோரேஜ்' பிரச்னை காரணமாக, தொடர்ந்து எலக்ட்ரானிக் டிக்கெட்டிங் மெஷின் என்ற, இ.டி.எம். மெஷினை பயன்படுத்த முடியாமல் வழக்கம்போல அச்சடிக்கப்பட்ட டிக்கெட் வழங்கினாலும், கணக்கு விபரங்களை சரிவர சமர்ப்பிக்க முடிவதில்லை என, கண்டக்டர்கள் புலம்பி வருகின்றனர்.
அரசு போக்குவரத்து கழகம், பொள்ளாச்சியில் உள்ள மூன்று கிளைகளில் இருந்து, புறநகர், உள்ளூர் என, தினமும், 187 பஸ்கள் இயக்கப்படுகின்றன. பயணியருக்கு விரைந்து டிக்கெட் வழங்கும் வகையில், டச் ஸ்கிரீன் வசதி கொண்ட, எலக்ட்ரானிக் டிக்கெட்டிங் மெஷின் (இ.டி.எம்.) கண்டக்டர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, பயணப் பட்டியல், டிக்கெட் விற்பனை தொடர்பான விபரங்களை, உரிய அதிகாரிகள் உடனடியாகத் தெரிந்துகொள்வது மட்டுமின்றி, முறைகேடுகளும் குறைந்தன. துவக்கத்தில், கண்டக்டர்களின் பணிச்சுமையை குறைத்தது.
தற்போது, பேட்டரியின் 'ஸ்டோரேஜ்' அடிக்கடி குறைவது, நெட்ஒர்க் பிரச்னை போன்ற காரணங்களால், அதனை முறையாகப் பயன்படுத்த முடியாமல் கண்டக்டர்கள் திணறி வருகின்றனர்.
அதற்கு மாற்றாக, அச்சடிக்கப்பட்ட டிக்கெட்டை பயணியருக்கு வழங்கினாலும், பணிமனை திரும்பி, கணக்குகளை ஒப்படைக்கும் போது, குழப்பம் ஏற்படுவதாகவும் அதிருப்தி தெரிவிக்கப்படுகிறது.
அரசு பஸ் கண்டக்டர்கள் கூறியதாவது:
தினமும், இ.டி.எம். மெஷினைப் பயன்படுத்த வேண்டும். சில வழித்தடங்களில் 'நெட்ஒர்க்' பிரச்னை ஏற்படும் போது, டிக்கெட் பிரின்ட் கிடைப்பதில்லை. பயன்பாடு அதிகரிப்பதால் 'பேட்டரி ஸ்டோரேஜ்' குறைந்து விடுகிறது.
அப்போது, அச்சடிக்கப்பட்ட டிக்கெட் வழங்கப்படுகிறது. அதிகப்படியான கண்டக்டர்கள், இப்பிரச்னையை எதிர்கொண்டு வருகின்றனர். பணிமனைக்கு திரும்பிய கண்டக்டர்கள் ஒவ்வொருவரும், ஒரே நேரத்தில் இரண்டு வகையான கணக்குகளை சரிபார்த்து வழங்க வேண்டியுள்ளது.
குழப்பம் காரணமாக, காலவிரயமும் அதிகரிக்கிறது. குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில், இ.டி.எம்., மெஷினை சர்வீஸ் செய்து தர, ஸ்டேட் வங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.