/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பழைய சர்க்கார்பதி கிராமத்தில் அரசு பஸ் சேவை; சட்டப்பணிகள் ஆணைக்குழு நடவடிக்கை
/
பழைய சர்க்கார்பதி கிராமத்தில் அரசு பஸ் சேவை; சட்டப்பணிகள் ஆணைக்குழு நடவடிக்கை
பழைய சர்க்கார்பதி கிராமத்தில் அரசு பஸ் சேவை; சட்டப்பணிகள் ஆணைக்குழு நடவடிக்கை
பழைய சர்க்கார்பதி கிராமத்தில் அரசு பஸ் சேவை; சட்டப்பணிகள் ஆணைக்குழு நடவடிக்கை
ADDED : மார் 30, 2025 10:47 PM

பொள்ளாச்சி; சட்டப்பணிகள் ஆணைக்குழு வாயிலாக, பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையின் பேரில், பொள்ளாச்சியில் இருந்து பழைய சர்கார்பதி கிராமத்திற்கு அரசு பஸ் சேவை துவக்கப்பட்டது.
கோவை மாவட்டம் மற்றும் பொள்ளாச்சி வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், ஆனைமலை அருகே உள்ள பழைய சர்கார்பதி கிராமத்தில், பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்களுக்கான சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. முன்னதாக, சார்பு நீதிபதி மோகனவள்ளி, வரவேற்றார்.
முதன்மை மாவட்ட நீதிபதி விஜயா தலைமை வகித்தார். பின்னர், சட்டப்பணிகள் ஆணைக்குழு வாயிலாக பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பேசினார்.
மேலும், சட்டப்பணி ஆணைக்குழு வாயிலாக தீர்வு காணப்பட்டதன் பேரில், 102 பேருக்கு ஜாதிச்சான்றிதழ், 3 பேருக்கு ரேஷன் கார்டு, 12 பேருக்கு பட்டா, 2 பேருக்கு புதிய வங்கி கணக்கு துவக்கம், 5 பேருக்கு இலவச தையல் மெஷின், 5 மாணவ, மாணவியருக்கு கல்லுாரிச் சான்றிதழ்களை வழங்கினார்.
அதேபோல, பழைய சர்கார்பதி கிராமத்திற்கு காலை மற்றும் மாலை என, இரு வேளையும், பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் இருந்து, அரசு பஸ் சேவையையும் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, மாவட்ட நீதிபதி நாராயணன், இலவச சட்ட உதவி மையம், நிரந்தர மக்கள் நீதிமன்றம், சமரச தீர்வு மையத்தின் செயல்பாடுகள் குறித்து பேசினார். சார்பு நீதிபதி ரமேஷ் நன்றி கூறினார்.
மாவட்ட நீதிபதி நாராயணன், சார்பு நீதிபதிகள், பொள்ளாச்சி தாலுகா கோர்ட் நீதிபதிகள், அரசு வக்கீல் தேவசேனாதிபதி, பொள்ளாச்சி வக்கீல் சங்க தலைவர் துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.