UPDATED : அக் 23, 2026 07:23 PM
ADDED : அக் 23, 2026 07:18 PM
வால்பாறை: டி.என்.பி.எஸ்.சி., உள்ளிட்ட அரசு போட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்காக, நுாலகத்தில் பயிற்சி மையம் அமைக்க வேண்டும், என, மா.கம்யூ., கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
வால்பாறை மா.கம்யூ., கட்சியின் தாலுகா பொதுச்செயலாளர் பரமசிவம் கோவை கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
வால்பாறையில் கடந்த சில ஆண்டுகளாக, டி.என்.பி.எஸ்.சி., போட்டி தேர்வுக்கான பயிற்சி மையம், நுாலகத்தில் இலவசமாக நடத்தப்பட்டது. கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை வாயிலாக கடந்த ஆண்டு வரை சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்பட்டதால் மாணவர்கள் அதிக அளவில், அரசு போட்டி தேர்வு எழுதி வெற்றி பெற்றனர்.
வால்பாறையில் தொழிலாளர்களின் குழந்தைகள் தான், அரசு போட்டி தேர்வு எழுதுகின்றனர். இவர்கள் தனியார் வாயிலாக நடத்தப்படும் பயிற்சி மையத்தில் பணம் செலுத்தி படிக்க முடியாத நிலை உள்ளது. எனவே, இந்த ஆண்டும் வால்பாறை நுாலகத்தில் போட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவமாக பயிற்சி மையம் துவங்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
