/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கபடி போட்டியில் கலக்கிய அரசு மாநகராட்சி பள்ளி மாணவர்கள்
/
கபடி போட்டியில் கலக்கிய அரசு மாநகராட்சி பள்ளி மாணவர்கள்
கபடி போட்டியில் கலக்கிய அரசு மாநகராட்சி பள்ளி மாணவர்கள்
கபடி போட்டியில் கலக்கிய அரசு மாநகராட்சி பள்ளி மாணவர்கள்
ADDED : ஆக 07, 2025 09:29 PM
கோவை; கோவை மாவட்ட கல்வித்துறை சார்பில் பாரதியார் தின, குடியரசு தின விளையாட்டு மற்றும் தடகள போட்டிகள் நடந்துவருகின்றன. ஆ-குறுமைய விளையாட்டு போட்டிகளின் ஒரு பகுதியாக கபடி இடம்பெற்றது.
புலியகுளம் புனித அந்தோணியார் பள்ளி மைதானத்தில் மாணவர்களுக்கான கபடிப் போட்டி நடந்தது. சி.எஸ்.ஐ., பள்ளி முதல்வர் குளோரி லதா போட்டிகளை துவக்கிவைத்தார்.
பல்வேறு சுற்றுகளை அடுத்து நடந்த, 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கபடி இறுதிப்போட்டியில், காந்திமாநகர் அரசு உயர்நிலைப் பள்ளி அணி, எல்சிமெட்ரிக் பள்ளி அணியை வென்று முதலிடம் பிடித்தது.
தொடர்ந்து, 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான போட்டியில் ரத்தினபுரி மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி அணி, டிரினிட்டி மெட்ரிக் பள்ளி அணியையும், 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான போட்டியில், மணியகாரம்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி அணி, ராமநாதபுரம் மாநகராட்சி பள்ளி அணியை வென்று முதலிடத்தை பிடித்தன.