ADDED : அக் 22, 2026 07:56 PM

கோவை: தமிழநாடு அரசு ஊழியர் சங்கம், மாவட்ட கிளை சார்பில், 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி, தர்ணா போராட்டம் கலெக்டர் அலுவலம் முன் இன்று (அக்.,22) நடந்தது.போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் பாண்டியராஜன் தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் உதயகுமார் பேசியதாவது:த.வெ.க., தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல் படுத்த வேண்டும். பணி நியமனம் செய்யப்பட்ட ஊழியர்கள் அனைவருக்கும் பணிக்கொடை வழங்க வேண்டும். அலுவலக உதவியாளருக்கு இணையாக கிராம உதவியாளர்களுக்கும் ரூ.15750- அடிப்படை சம்பளம் வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ.15700- காலமுறை ஊதியமும், மாதாந்திர ஓய்வூதியம் ரூ.6750 அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும். மேலும், அரசு ஊழியர் சங்க மாநில மாநாட்டில் நிறைவேற்றபட்ட 15 தீர்மானங்களை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.
