/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு
/
அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு
ADDED : ஜூன் 01, 2025 11:18 PM

பொள்ளாச்சி : கோடங்கிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
பொள்ளாச்சி அருகே, கோடங்கிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சுற்றுப்பகுதியில், தலைமையாசிரியர் தினகரன் மற்றும் ஆசிரியர்கள் வீடு, வீடாக சென்று அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க, துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஆசிரியர்கள் கூறியதாவது: அரசுப்பள்ளியில் படிப்பதால் மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. மேலும், விலையில்லா பாடநுால், நோட்டு, சீருடை, காலணி, எழுதுகோல் உள்ளிட்ட அனைத்தும் வழங்கப்படுகிறது. முதல்வரின் காலை உணவு சிற்றுண்டி, சத்தான மதிய உணவு குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது.
மேலும், பள்ளியின் சிறப்புகள் குறித்து, தமிழ், ஆங்கிலம் கையெழுத்துக்கு பிரத்தியேக பயிற்சிகள், யோகா மற்றும் உடற்பயிற்சி, புதிய கற்றல் அணுகுமுறை, கற்றலில் பின் தங்கிய மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் குறித்து விளக்கப்பட்டது. நான் முதல்வன், தமிழ்புதல்வி போன்ற திட்டங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு, கூறினர்.