/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில அளவிலான போட்டியில் அசத்திய அரசு பள்ளி மாணவி
/
மாநில அளவிலான போட்டியில் அசத்திய அரசு பள்ளி மாணவி
மாநில அளவிலான போட்டியில் அசத்திய அரசு பள்ளி மாணவி
மாநில அளவிலான போட்டியில் அசத்திய அரசு பள்ளி மாணவி
ADDED : டிச 06, 2025 06:29 AM

அன்னூர்: வடக்கலூர் அரசு பள்ளி மாணவி, மாநில அளவிலான போட்டியில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.
மாணவர்களின் தனித்திறன்களை மேம்படுத்த பள்ளிக்கல்வித்துறை சார்பில், அக்டோபரில் அன்னூர் ஒன்றிய அளவிலான கலைத் திருவிழா நடந்தது. வடக்கலூர் அரசு நடுநிலைப்பள்ளி ஆறாம் வகுப்பு மாணவி சத்யா, பல குரல் பேச்சுப் போட்டியில், ஒன்றிய அளவில் முதலிடம் பெற்றார்.
கடந்த மாதம் மாவட்ட அளவில் நடந்த போட்டியிலும் முதலிடம் பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றார். மாநில போட்டி, ஓசூரில் நடந்தது. மாணவி சத்யா பல குரல் பேச்சு போட்டியில், மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்று சாதித்துள்ளார். சாதித்த மாணவிக்கு, வழிகாட்டி ஆசிரியை ஜெகதாம்பாள், தலைமை ஆசிரியர் சாரதி மற்றும் ஆசிரியர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.