/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மத்திய அரசின் விளையாட்டு போட்டியில் மாணவர்கள் ஆர்வம்
/
மத்திய அரசின் விளையாட்டு போட்டியில் மாணவர்கள் ஆர்வம்
மத்திய அரசின் விளையாட்டு போட்டியில் மாணவர்கள் ஆர்வம்
மத்திய அரசின் விளையாட்டு போட்டியில் மாணவர்கள் ஆர்வம்
ADDED : டிச 06, 2025 06:28 AM
மேட்டுப்பாளையம்: மத்திய இணை அமைச்சர் முருகன் ஏற்பாட்டில், மேட்டுப்பாளையத்தில் மத்திய விளையாட்டு அமைச்சகத்தின், 'கேலோ இந்தியா பிட் இந்தியா' திட்டத்தில் 'சன்சத் கேல் மஹோத்சவ் 2025' விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, நேற்று காரமடையில் உள்ள ரங்கநாதர் பப்ளிக் பள்ளியில் வாலிபால், கபடி, சிலம்பம், கோ-கோ உள்ளிட்ட போட்டிகள் தனித்தனியாக நடைபெற்றன. இதில் மேட்டுப்பாளையம், காரமடை, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவர்கள், ஆர்வமுடன் பங்கேற்றனர்.
போட்டிகளை, வடக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் மாரிமுத்து, பொதுச்செயலாளர் விக்னேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் சதீஷ் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர். சிறப்பு விருந்தினர்களாக பள்ளி நிறுவனர் கல்யாண சுந்தரம், மேட்டுப்பாளையம் அனைத்து இந்து சமுதாய சங்க தலைவர் ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.