/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தம்பு பள்ளியில் விளையாட்டு விழா
/
தம்பு பள்ளியில் விளையாட்டு விழா
ADDED : டிச 06, 2025 06:28 AM

பெ.நா.பாளையம்: பிரஸ்காலனி தம்பு மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு தின விழா நடந்தது. தலைமை ஆசிரியர் ரமேஷ் வரவேற்றார். செயலாளர் பிரீத்தா பிரியதர்ஷினி, விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்து, தேசியக் கொடி ஏற்றினார்.
ப்ளூ மவுண்ட் அறக்கட்டளை உறுப்பினர் சந்திரமணி புவனேந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, விளையாட்டு கொடியை ஏற்றி, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். உடற்கல்வி ஆசிரியை கோமதி, நடப்பு கல்வி ஆண்டின், விளையாட்டு துறையின் சாதனைகளை ஆண்டறிக்கையாக வாசித்தார்.
விழாவில், கல்வி இயக்குனர் குணசேகர், உதவி தலைமை ஆசிரியர் மாடசாமி, விளையாட்டு ஆசிரியர் அருண்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விளையாட்டு துறையின் மூத்த ஆசிரியர் குணசேகர் நன்றி கூறினார்.

