/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய குத்துச்சண்டை போட்டிக்கு அரசு பள்ளி மாணவன் தேர்வு
/
தேசிய குத்துச்சண்டை போட்டிக்கு அரசு பள்ளி மாணவன் தேர்வு
தேசிய குத்துச்சண்டை போட்டிக்கு அரசு பள்ளி மாணவன் தேர்வு
தேசிய குத்துச்சண்டை போட்டிக்கு அரசு பள்ளி மாணவன் தேர்வு
ADDED : ஏப் 29, 2025 06:23 AM

கோவை:
கோவை, வாகராயம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 மாணவன் மிருதுன், கோவாவில் நடைபெற இருக்கும், தேசிய குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளார்.
திருச்சங்கோட்டில் கடந்த 27ம் தேதிநடைபெற்ற, மாநில குத்துச்சண்டை போட்டியில், வாகாரம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ்2 மாணவன் மிருதுன் பங்கேற்று, 19 வயதிற்குட்பட்டோர் பிரிவில், தங்கப்பதக்கம் வென்றார்.
இதையடுத்து, மே 24ம் தேதி கோவா, கலங்குட் பகுதியில் நடைபெறும், 'யூத் அண்ட் ஸ்போர்ட்ஸ் புரோமோஷன் அசோசியேஷன் ஆப் தமிழ்நாடு' நடத்தும், தேசிய குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
மாநில போட்டியில் வென்று, தேசிய போட்டிக்கு தேர்வாகியுள்ள மாணவனை, பள்ளி தலைமையாசிரியர் செந்தில்குமார், ஆசிரியர்கள், பயிற்சியாளர் உள்ளிட்டோர் பாராட்டினர்.