/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அறிவியல், கணித புதிர் அமைத்து அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்
/
அறிவியல், கணித புதிர் அமைத்து அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்
அறிவியல், கணித புதிர் அமைத்து அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்
அறிவியல், கணித புதிர் அமைத்து அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்
ADDED : அக் 30, 2025 12:13 AM

கோவை: சிங்காநல்லுார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், இன்னோவேட்டிவ் அண்டு இல்லுமினேட் -2025 என்ற தலைப்பில் அறிவியல், கணிதம் உள்ளிட்ட பல்வேறு பாடம் சார்ந்த கண்காட்சி நடைபெற்றது. 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவியர் பங்கேற்றனர்.
தமிழ் மொழி சார்ந்து இலக்கியம் தொடர்பான காட்சிப் பொருட்கள், ஆங்கில மொ ழி சார்ந்த படைப்புகள் இடம்பெற்றிருந்தன. கணிதம், அறிவியல், சமூக அறிவியல், வணிகவியல், பொருளாதாரம் மற்றும் வரலாறு போன்ற பல்வேறு பாடங்களிலும் த ங்கள் திறமையை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு வடிவமைப்புகளை உருவாக்கி, காட்சிப்படுத்தியிருந்தனர்.
இதுகுறித்து பள்ளித் தலைமையாசிரியர் ஜெயஸ்ரீ கூறுகையில், ''242 கண்டுபிடிப்புகள் கண்காட்சியில் வைக்கப்பட்டன. சிறப் பம்சமாக, எளிதில் விடையளிக்க முடியாத வகையில் கணிதப் பிரிவில் மா ணவியர் ஒரு புதிரை வடிவமைத்திருந்தது ஆச்சரியமாக இருந்தது. உயர்கல்வி தொடர்பான வழிகாட்டி ஸ்டால் அமைக்கப்பட்டு, தேவையான ஆலோசனை அளிக்கப்பட்டது,'' என்றார்.

