தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/‘விமானத்தில் பயணித்த அரசு பள்ளி மாணவர்கள்’

‘விமானத்தில் பயணித்த அரசு பள்ளி மாணவர்கள்’

‘விமானத்தில் பயணித்த அரசு பள்ளி மாணவர்கள்’


UPDATED : நவ 16, 2026 12:00 AM

ADDED : நவ 15, 2026 11:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 16, 2026 12:00 AM ADDED : நவ 15, 2026 11:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சூலூர்:

குழந்தைகள் தினத்தையொட்டி, மெட்ராஸ் மெட்ரோ மற்றும் கோயமுத்தூர் பெண்டா ரவுண்ட் டேபிள் கோயமுத்தூர் ஏசிஎம்இ ரவுண்ட் டேபிள் 133, லேடீஸ் சர்க்கிள் 85, கோயமுத்தூர் யுனைடெட் ரவுண்ட் டேபிள் 186 அமைப்புகளின் ஏற்பாட்டில், நேற்று முன்தினம் காலை கோவை விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு சின்னியம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர், 26 பேர் முதன் முறையாக விமானத்தில் பறந்தனர்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் முரளி விஜய் கலந்துரையாடினார். ஆசிரியர் ரேவதி, உடற்கல்வி ஆசிரியர் காளீஸ்வர் மாணவர்களை வழி நடத்தினர்.

சென்னையில் மெட்ரோ ரயில், வி.ஜி.பி., மெரைன் கிங்டமை சுற்றி பார்த்தனர். நேற்று முன்தினம் இரவு மாணவர்கள் கோவை வந்தடைந்தனர். அவர்களை வரவேற்ற தலைமையாசிரியர் பிரபாகர், மாணவர்களுக்கு புது அனுபவத்தை வழங்கிய அமைப்புகளுக்கு நன்றி தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us