/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா
/
அரசு மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா
ADDED : பிப் 16, 2025 11:36 PM

அன்னுார்; கெம்பநாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா நடந்தது. பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார்.
தலைமை ஆசிரியை தீபா பேசுகையில், ''10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தொடர்ந்து, இப்பள்ளி 90 சதவீதத்திற்கும் அதிகமான தேர்ச்சி பெற்று சாதித்து வருகிறது. ஸ்மார்ட் வகுப்பறை உள்ளது. கணினிகள் உள்ளன. தனியார் பள்ளிகளுக்கு இணையாக இங்கு கற்பித்தல் உபகரணங்கள் உள்ளன,'' என்றார்.
விழாவில் கடந்த ஆண்டு 10, 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் இரண்டு இடங்களை பிடித்த, மாணவ, மாணவியருக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி துறை நடத்திய போட்டியில், வெற்றி பெற்ற இப்பள்ளியின் 11ம் வகுப்பு மாணவி ரேஷ்மா கவுரவிக்கப்பட்டார். அவர் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று 10 ஆயிரம் ரூபாய் வென்று மாநில அளவிலும் போட்டியில் பங்கேற்றுள்ளார்.
விழாவில், மாணவ, மாணவியர், கலை நிகழ்ச்சி நடந்தது. பள்ளி மேலாண்மை குழு, கல்வி குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், முன்னாள் ஆசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.

