/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆய்வுக் கூட்டம் நடத்தி பரிந்துரை துணைக் குழுவுக்கு அரசு உத்தரவு
/
ஆய்வுக் கூட்டம் நடத்தி பரிந்துரை துணைக் குழுவுக்கு அரசு உத்தரவு
ஆய்வுக் கூட்டம் நடத்தி பரிந்துரை துணைக் குழுவுக்கு அரசு உத்தரவு
ஆய்வுக் கூட்டம் நடத்தி பரிந்துரை துணைக் குழுவுக்கு அரசு உத்தரவு
ADDED : ஜன 09, 2024 12:28 AM
கோவை;பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக வரும், 23ம் தேதி வரை துணைக்குழு ஆய்வுக்கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் ஆகிய நகர்ப்புற உள்ளாட்சிகளில், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு விதிகள்-2023 கடந்தாண்டு ஏப்., மாதம் அமல்படுத்தப்பட்டது.
இதில், பணியிட மாறுதல், பதவி உயர்வு உள்ளிட்டவை சார்ந்த விதிகளில் திருத்தம் செய்யுமாறு மாநகராட்சி பணியாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும், அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக, அரசு இணை செயலர்கள், இணை இயக்குனர் உட்பட ஐந்து பேர் அடங்கிய துணைக்குழு அமைக்கப்பட்டது.
இக்குழு, மாநகராட்சி பணியாளர்கள் சங்கத்தினர் உள்ளிட்டோரிடம் கோரிக்கைகளை பெற்று வந்த நிலையில், வரும், 23ம் தேதி வரை ஆய்வு கூட்டங்கள் நடத்தி, அரசுக்கு உடனடியாக பரிந்துரைகள் வழங்கவுள்ளது.
மாநகராட்சி பணியாளர் சங்கத்தினர் கூறுகையில், 'துணைக் குழு சார்பில் வரும், 23ம் தேதி வரை எங்களது கோரிக்கைகள் மட்டுமின்றி, நிதி, தேர்தல், பொது சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்டவை சார்ந்து, தினமும் ஆய்வுக்கூட்டம் நடத்தவுள்ளது.
ஒவ்வொரு நாளும் கலந்தாய்வு செய்து, பணி விதிகளில் திருத்தம் உள்ளிட்டவை சார்ந்த பரிந்துரைகளை, நகர்ப்புற உள்ளாட்சி நிர்வாகம் வாயிலாக அரசுக்கு வழங்கும். வரும் மார்ச், 15ம் தேதிக்குள் பரிந்துரைகள் சார்ந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது' என்றனர்.