/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வட்டப்பாறை நீர் மின் திட்டம் அமைப்பதற்கு அரசு அனுமதி
/
வட்டப்பாறை நீர் மின் திட்டம் அமைப்பதற்கு அரசு அனுமதி
வட்டப்பாறை நீர் மின் திட்டம் அமைப்பதற்கு அரசு அனுமதி
வட்டப்பாறை நீர் மின் திட்டம் அமைப்பதற்கு அரசு அனுமதி
ADDED : பிப் 09, 2024 10:57 PM

பாலக்காடு;பாலக்காடு அருகே, வட்டப்பாறை சிறு மின் திட்டத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மண்ணார்க்காடு அருகே உள்ளது பாலக்கயம். இங்குள்ள வட்டப்பாறை நீர் வீழ்ச்சியில் இருந்து, மின் உற்பத்தி செய்ய மாவட்ட ஊராட்சி திட்டமிட்டது. இது தொடர்பாக மாவட்ட ஊராட்சி நிர்வாகம் அளித்த அறிக்கைக்கு, கேரள அரசு அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஊராட்சி தலைவர் பினுமோள் கூறியதாவது:
மாவட்ட ஊராட்சி சார்பில், மீன்வெல்லம் சிறு நீர் மின் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதை முன்மாதிரியாக கொண்டு வட்டப்பாறை நீர் மின் திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்திற்கு அரசு அங்கீகாரம் அளித்துள்ளது.
இத்திட்டத்தை மாவட்ட ஊராட்சிக்கு ஒதுக்கீடு செய்ய, எரிசக்தி மேலாண்மை மைய இயக்குனரின் பரிந்துரைக்கு பின் அரசு அனுமதி வழங்கியுள்ளது. மாவட்ட ஊராட்சி மற்றும் 'ஸ்மால் ஹைட்ரோ கம்பெனி' தலைமையில் பல்வேறு நீர் மின் திட்டங்கள் துவங்குவதின் ஒரு பகுதியாக, சமீபத்தில் எம்.எல்.ஏ., சாந்தகுமாரியின் தலைமையிலான குழு, இத்திட்டம் அமையும் பகுதியை பார்வையிட்டது.
எதிர்பார்த்ததை விடஅதிக லாபம் ஈட்டிய மீன்வெல்லம் நீர்மின் திட்டத்தை தொடர்ந்து, வட்டப்பாறையிலும் நீர் மின் திட்டம் அமைக்கப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.