/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பட்டதாரி ஆசிரியர்களுக்கு முழு ஊதியம் வேண்டும்'
/
'பட்டதாரி ஆசிரியர்களுக்கு முழு ஊதியம் வேண்டும்'
ADDED : ஜன 16, 2025 03:46 AM
கோவை: கோவை மாவட்ட தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம், ஆன்லைனில் நடந்தது.
இதில், ஆசிரியர்கள் தேர்வு முடிவுகள் மீளாய்வுக் கூட்டத்தில், கல்வி அலுவலர்கள் ஆசிரியர்களைத் தரக்குறைவான வார்த்தைகளைப் பிரயோகம் செய்ததற்கு, கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்பட்சத்தில், போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
வரும் மார்ச், ஏப்ரல் பொதுத்தேர்வுக்கான பணிகள் ஒதுக்கீட்டில் குளறுபடிகள் இல்லாமல், நடைபெறுவது தொடர்பாக, முதன்மைக் கல்வி அலுவலரை சந்திக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
பணி நீட்டிப்புக் காலத்தில், பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள், முழு ஊதியம் பெறக்கூடிய வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.
சங்கத்தின் மாநிலத்துணைத்தலைவர் அருளானந்தம், மாவட்டத்தலைவர் சரவணக்குமார், செயலர் வேல்ராஜ், பொருளாளர் இதாயத்துல் சாதிக் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.