/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
/
ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
ADDED : ஜன 20, 2024 08:39 PM

பெ.நா.பாளையம்:துடியலுார் அருகே உள்ள வட்டமலைபாளையம் ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லுாரியில், 25வது பட்டமளிப்பு விழா நடந்தது.
கல்லுாரி முதல்வர் அலமேலு வரவேற்றார். எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசாமி தலைமை வகித்தார்.
முதல் நாள் விழாவில், பெங்களூரு எல்.அன்ட்.டி., டெக்னாலஜி சர்வீசஸ் லிட்., நிறுவன தலைமை தொழில்நுட்ப அதிகாரி ஆஷிஷ் ஹுஷு பங்கேற்று, மாணவ, மாணவியருக்கு பட்டம் வழங்கினார்.
இரண்டாம் நாள் விழாவில், இந்தியா மற்றும் தெற்காசிய பிராந்தியத்தின் ஏர்பஸ் இன்னோவேஷன் சென்டர் நிறுவனத்தின் செயல்பாட்டு தலைவர் ராமநாதன் சீனிவாசன், மாணவ, மாணவியருக்கு பட்டம் வழங்கினார்.
எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி ராம்குமார், துணை முதல்வர் கருப்புசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.