/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'மக்கள் மனுக்களுக்கு அதிக முக்கியத்துவம்'
/
'மக்கள் மனுக்களுக்கு அதிக முக்கியத்துவம்'
ADDED : ஜூலை 23, 2025 10:56 PM

கோவை; ''பொதுமக்களின் புகார்கள், மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர்(தெற்கு) கார்த்திகேயன் தெரிவித்தார்.
கோவை மாநகர, போலீஸ் தெற்கு துணை கமிஷனராக பணிபுரிந்த உதயகுமார் கடந்த, 14ம் தேதி பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக சென்னை பயங்கரவாத தடுப்புப் பிரிவு எஸ்.பி.,யாக பணிபுரிந்த கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார்.
இவர் நேற்று, கோவை மாநகர தெற்கு துணைக் கமிஷனராக பொறுப்பேற்றுக் கொண்டார்.அவர் கூறுகையில், ''மாநகர போலீஸ் கமிஷனர் அறிவுறுத்தலின்படி, அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேம்படுத்தப்படும். போதைப் பொருட்கள் நடமாட்டத்தை தடுக்க, தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் மனுக்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். அவர்களது பிரச்னைகளை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.