ADDED : மார் 06, 2026 05:14 AM

அ நிறம் | அளவு
கோவை: நாமக்கல் கிரீன் பார்க் கோச்சிங் சென்டரின், கோவை கிளையான கீரின் பார்க் கேரியர் அகாடமி கோவை ஹோப்ஸ் காலேஜ் பகுதியில் நேற்று திறக்கப்பட்டது.
கடந்த, 2019ம் ஆண்டு முதல் கோவையில் இம்மையம் செயல்பட்டு வருகிறது. நேற்று முதல் புதிய கட்டடத்தில் நவீன கற்றல், கற்பித்தல் வசதிகளுடன் செயல்படத் துவங்கியது. ஜெம் மருத்துவமனை தலைவர் பழனிவேல் புதிய வகுப்பறைகளை துவக்கி வைத்தார். நாமக்கல் கிரீன் பார்க் பள்ளியின் தலைவர் சரவணன் வரவேற்றார். இம்மையம் வாயிலாக, 'நீட்' பயிற்சி பெறும் அனைத்து நிலை மாணவர்களுக்கும் ஆன்லைன், ஆப்லைன் வாயிலாக பயிற்சி அளிக்கப்படுகிறது. 300 பேர் பயிற்சி பெறும் வகையில், வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திறப்பு விழா நிகழ்வில், அகாடமியின் இயக்குனர் நவீன் சூர்யா, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
