/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்
/
கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்
ADDED : அக் 25, 2024 10:24 PM

கோவை: விவசாயிகள் குறை தீர்ப்புக்கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கோவை கலெக்டர் தலைமை வகித்தார்.
இதில் விவசாயிகள் கூறியதாவது:
n மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரம், தொண்டாமுத்துார் ஒன்றியத்திற்குட்பட்ட பச்சாவயல் பகுதியில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் நீர் செல்லாமல், வாய்க்காலில் செல்கிறது. இதனால் தடுப்பணை கட்டியும் பலனில்லை. பொதுப்பணித்துறை மற்றும் ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
n கோவை சத்தி சாலை அன்னுாரில், தனியார் தொழிற்சாலை சார்பில் இரும்பு உலோகத்தில் வேகத்தடை அமைத்துள்ளதால், வாகனங்களில் செல்வோர் கடும் உடல் உபாதைக்கு ஆளாகின்றனர்.
n கூட்டுறவுத்துறை மற்றும் ஆவின் நிறுவனம் சார்பில், பால்உற்பத்தியை பெருக்க மாடுகளுக்கு வழங்கப்படும் நவீன தீவனப்பொருள், மார்க்கெட் விலையை விட அதிகமாக உள்ளதால், விவசாயிகளுக்கு கட்டுப்படியாவதில்லை.
n கூட்டுறவுத்துறை சார்பில், 2021ல் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. மூன்றாண்டுகளாகியும் பணம் வந்து சேரவில்லை. மதுக்கரையில் தோட்டக்கலைத்துறை அலுவலகம் அமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும்.
n பேரூர் செட்டிபாளையத்தில் வடிக்காரன்குட்டை துார்வாரப்பட்டு ஆக்கிரமிப்பு அப்புறப்படுத்தினால் கால்நடைகைளுக்கும், காட்டுவிலங்குகளுக்கும் பயனளிக்கும். நிலத்தடிநீர் செறிவடையும்.
n மாதம்பட்டியிலிருந்து காருண்யா வரை, அமைக்கும் உயர்மின்கோபுரங்கள் விவசாயநிலங்களில் அமைக்கப்பட்டு வருகிறது. சட்டத்தையும், விதிமுறைகளையும் மீறி மின்வாரியம் செயல்படுகிறது.
n கோவனுார் அருகே உள்ள, ஏழுஎருமைபள்ளத்தில் லேஅவுட் மற்றும் குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் சேகரமாகி, சூழலை பாழ்படுத்துவதாக விவசாயிகள் கூறினர். விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று, கலெக்டர் கிராந்திகுமார் உறுதியளித்தார்.