/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாதுகாப்பு துறையினருக்கு நாளை குறைதீர் கூட்டம்
/
பாதுகாப்பு துறையினருக்கு நாளை குறைதீர் கூட்டம்
ADDED : நவ 24, 2024 11:51 PM
கோவை; பாதுகாப்புத்துறையில் பணிபுரிந்து ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு நாளை (நவ. 26) குறைதீர்ப்பு முகாம் நடக்கிறது.
சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் ஜெயசீலன் அறிக்கை:
பாதுகாப்புத்துறையில் பணிபுரிந்து ஓய்வூதியம் பெறுபவர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் ராணுவத்தினர், கடற்படை, விமானப்படையை சேர்ந்த முன்னாள் படைவீரர்களை சார்ந்தவர்கள், தங்களது வாழ்நாள் சான்று சமர்ப்பிப்பதில் ஏற்படும் சிக்கல்களை தீர்த்து வைக்க, சிறப்பு முகாம் நாளை நடத்தப்படுகிறது.
சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் அலுவலகம் மற்றும் தட்ஷின் பாரத் ராணுவம் சார்பாக, ஓய்வூதிய குறை தீர்ப்பு முகாம், நவ., 26 காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, கோவை ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள எஸ்.என்.ஆர். அரங்கில் நடக்கிறது. இதில் சிறப்பு விருந்தினராக கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பங்கேற்கிறார்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.