/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு; ஏமாற்றமடைந்த விவசாயிகள்
/
குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு; ஏமாற்றமடைந்த விவசாயிகள்
குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு; ஏமாற்றமடைந்த விவசாயிகள்
குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு; ஏமாற்றமடைந்த விவசாயிகள்
ADDED : ஜூலை 23, 2025 10:56 PM
கோவை; கோவை தெற்கு கோட்டாட்சியர் அலுவலகத்தில், நேற்று நடப்பதாக இருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம், மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களை நடத்த தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளதால், அரசு அலுவலகங்களில் வழக்கமாக மேற்கொள்ளும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
கோவை தெற்கு கோட்டாட்சியர் அலுவலகத்தில், நேற்று நடைபெறுவதாக இருந்த, மாதாந்திர விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம், மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. சூலுார், மதுக்கரை, பேரூர் கோவை தெற்கு தாலுகாவிலிருந்து ஏராளமான விவசாயிகள் மனுக்களோடு தெற்கு கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்திருந்தனர். கூட்டம் நடைபெறாததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.