/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மண் சறுக்கி விட்டதில் விழுந்த காவலர் படுகாயம்
/
மண் சறுக்கி விட்டதில் விழுந்த காவலர் படுகாயம்
ADDED : மே 04, 2025 12:52 AM
தொண்டாமுத்தூர்: ஆறுமுககவுண்டனூரை சேர்ந்தவர் பாலமுரளி,32. இவர், செல்வபுரம் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிந்து வந்தார். அதன்பின், மண் கொள்ளை விசாரணை சிறப்பு புலனாய்வு குழுவில், தற்போது பணிபுரிந்து வருகிறார்.
பாலமுரளி, நேற்றுமுன்தினம் ஆறுமுககவுண்டனூரில் இருந்து பேரூர் வழியாக, தனது இருசக்கர வாகனத்தில், ஹெல்மெட் அணியாமல் வந்து கொண்டிருந்தார்.
வேடபட்டி கால்நடை மருந்தகம் அருகே, சாலையில் மண் இருந்ததால், அதில் இருசக்கர வாகனம் தடுமாறி விழுந்தார். தலை மற்றும் கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகிலிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம், கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது, தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். தொண்டாமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.