ADDED : மே 05, 2025 10:50 PM

கருமத்தம்பட்டி; கிட்டாம்பாளையத்தில் பவளக்கொடி கும்மி ஆட்ட குழுவின் அரங்கேற்ற விழா நடந்தது.
கருமத்தம்பட்டி அடுத்த கிட்டாம் பாளையம், கரிச்சிபாளையம் கிராமங்களை சேர்ந்த, 160 பேர், கடந்த நான்கு மாதங்களாக கும்மி ஆட்ட பயிற்சி பெற்றனர். இதைதொடர்ந்து கிட்டாம் பாளையத்தில், பயிற்சி ஆசிரியர் விஸ்வநாதன் தலைமையில் அரங்கேற்ற விழா நடந்தது. முன்னதாக, கரிய காளியம்மன் கோவிலில் இருந்து முளைப்பாரி எடுத்து வரப்பட்டு, கிட்டாம்பாளையம் பள்ளி மைதானத்தில் அரங்கேற்ற விழா துவங்கியது. பாடல் கலைஞர்கள் பாடல்களை பாட, இசைக்கலைஞர்கள் பம்பை இசைக்க, சிறுவர் முதல் பெரியவர்கள் வரையிலான ஆட்டக்கலைஞர்கள் உற்சாகத்துடன் ஆடி தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
நடன அசைவுகளை துல்லியமாக வெளிப்படுத்தி, பல மணி நேரம் பார்வையாளர்களை கவர்ந்தனர். பார்வையாளர்களும், கரவொலி எழுப்பி கலைஞர்களை உற்சாகப்படுத்தினர். ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்கள் சந்திரசேகர், ரங்கசாமி, சத்தியமூர்த்தி, சதாசிவம்,செல்வராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.