ADDED : செப் 18, 2025 10:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையத்தில் கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி, 6 கிலோ 500 கிராம் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த கேரளாவை சேர்ந்த முனீர், 24, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்புக்கு, பாதகமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக முனீர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை ரூரல் எஸ்.பி. கார்த்திகேயன், மாவட்ட கலெக்டர் பவன்குமாருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து, இச்சட்டத்தின் கீழ் முனீர் சிறையில் அடைக்கப்பட்டார்.