/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டோர் மீது 'குண்டாஸ்'
/
ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டோர் மீது 'குண்டாஸ்'
ADDED : ஏப் 21, 2025 10:13 PM
கோவை,; கடந்த 13ம் தேதி எல் அண்ட் டி பைபாஸ் ரோட்டில் பைக்கை ஒன்றை இருவர் திருட முயன்றனர். இதைப்பார்த்த பைக்கின் உரிமையாளர்கள் அவர்களை பிடிக்க முயற்சித்தார். அப்போது அவர்கள் கத்தியை காட்டி அவரை மிரட்டினர்.
அப்பகுதி மக்கள் அவர்களை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில், அவர்கள் திருநெல்வேலி முக்கூடல் ஆதிமூலனுார் வீதியை சேர்ந்த இசக்கிபாண்டியன், 26, சிவகாமிபுரம் சுரேஷ், 21எனத் தெரிந்தது. இதையடுத்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.இவர்கள் இருவர் மீதும், ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளதால் அவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்க பரிந்துரைக்கப்பட்டது.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரிடமும் இதற்கான உத்தரவு வழங்கப்பட்டது. இதேபோல், ரேஷன் அரிசி கடத்திய வழக்கில் கோவை சுகுணாபுரத்தை சேர்ந்த பெரோஸ்கான், 35, பாலக்காடு புதுச்சேரியை சேர்ந்த அய்யப்பக்குமார், 41 ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, கலெக்டர் உத்தரவிட்டார்.