sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 குருவாயூர் கோயில் யானைகள் மீது பவனி வந்த அய்யப்பன் ராம்நகர் ஸ்ரீ அய்யப்பன் பூஜா சங்க மஹோத்ஸவ விழாவில் கோலாகலம்

/

 குருவாயூர் கோயில் யானைகள் மீது பவனி வந்த அய்யப்பன் ராம்நகர் ஸ்ரீ அய்யப்பன் பூஜா சங்க மஹோத்ஸவ விழாவில் கோலாகலம்

 குருவாயூர் கோயில் யானைகள் மீது பவனி வந்த அய்யப்பன் ராம்நகர் ஸ்ரீ அய்யப்பன் பூஜா சங்க மஹோத்ஸவ விழாவில் கோலாகலம்

 குருவாயூர் கோயில் யானைகள் மீது பவனி வந்த அய்யப்பன் ராம்நகர் ஸ்ரீ அய்யப்பன் பூஜா சங்க மஹோத்ஸவ விழாவில் கோலாகலம்


UPDATED : டிச 29, 2025 02:54 PM

ADDED : டிச 29, 2025 06:07 AM

Google News

UPDATED : டிச 29, 2025 02:54 PM ADDED : டிச 29, 2025 06:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: ஸ்ரீ அய்யப்பன் பூஜா சங்க, 75வது ஆண்டு பூஜா மஹோத்ஸவ விழா, கோலாகலமாக நடந்தது.

குருவாயூரப்பன் கோயிலிலிருந்து வருகை தந்த, மூன்று யானைகள் பஞ்சவாத்தியங்கள் முழங்க திருவாபரணம் அணிந்து, திருவீதிஉலா வந்தது ராம்நகர் மக்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது.

பூஜா மஹோத்ஸவம் கடந்த, 24ம் தேதி துவங்கியது. தொடர்ந்து அன்றாடம் பூஜா வைபவங்கள் ஹோமங்கள் ஆகியவை நடந்தன. நேற்று காலை 6 மணிக்கு சூர்யநமஸ்கார பாராயணம், 8:30 க்கு தீபாராதனை நடந்தது.



9 மணிக்கு பஞ்சவாத்தியம் முழங்க தீர்த்தக்குடங்களையும், திருவாபரணங்களையும் சுமந்த யானை ராம்நகர் வீதிகளில் உலா வந்தது. 11:30க்கு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியும் கனகாபிஷேகமும் நடந்தது.

தொடர்ந்து பாம்பே சுந்தர்ராமன் பாகவதர் குழுவினரின் பஜனை நடந்தது.

மதியம் 12 மணிக்கு சிறப்பு அன்னதானமும், மதியம் 1 மணிக்கு மஹா தீபாராதனையும், மாலை 4 மணிக்கு பஞ்சவாத்தியத்துடன் திருவாபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட கஜவீரர்கள், இந்தரசன், செந்தாமராட்சன், தேவதாஸ் ஆகியோர் அணிவகுத்து நிற்க, அய்யப்பசுவாமி எழுந்தருளுவிக்கப்பட்டார்.

மூன்று கஜவீரர்களும் சத்தியமூர்த்தி சாலை அய்யப்ப பூஜா சங்கத்தில் துவங்கி, விவேகானந்தர் சாலை, கிராஸ்கட்சாலை, ராஜாஜி சாலை, காளிங்கராயன், அன்சாரிவீதி வழியாக மீண்டும் சத்தியமூர்த்தி சாலையிலுள்ள, ஸ்ரீ அய்யப்பன் பூஜா சங்கத்தை அடைந்தது.

வழிநெடுக வீட்டுவாசலில் காத்திருந்த பக்தர்கள் தேங்காய், பழம் உள்ளிட்ட மங்கல பொருட்கள் சமர்ப்பித்து சுவாமிக்கு வரவேற்பளித்து வழிபட்டனர்.

சுவாமி திருவீதி உலாவில்; கருட தைய்ய குழுவினரின் தையம் நடனம், செண்டைமேளம் இடம் பெற்றது. 6,000த்துக்கும் மேற்பட்டோருக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us