/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரை நுாற்றாண்டு கடந்தாலும் குறையாத அன்பு; நெகிழ வைத்த முன்னாள் மாணவர் சந்திப்பு

ADDED : பிப் 17, 2025 12:12 AM

கோவை; கோவை, வேளாண் பல்கலையில் 1975ம் ஆண்டு பி.எஸ்.சி., வேளாண்மை பட்டப்படிப்பு முடித்தவர்கள், 50 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சந்தித்து, தங்களின் நட்பைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
அப்போதைய காலகட்டத்தில், மாணவர்கள் மட்டுமே இந்த வகுப்பில் பயின்றனர். மாணவிகள் இல்லை. அப்போது பட்டப்படிப்பை நிறைவு செய்த 78 மாணவர்கள், வேளாண் பல்கலையில் இரண்டு நாட்கள் நடந்த நிகழ்வில், பொன்விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
தங்கள் மனைவியுடன் வந்திருந்த மாணவர்கள், தாங்கள் பயின்ற அறைகள், ஆய்வகங்கள், தாவரவியல் பூங்கா, பழப்பண்ணை, தங்கியிருந்த விடுதி ஆகியவற்றைச் சுற்றிப்பார்த்தனர். அப்போது தங்களின் பழைய நினைவுகளைப் பகிர்ந்து நெகிழ்ந்தனர்.
ஒவ்வொரு வரும் தாங்கள் பயணித்த துறைகள், பெற்ற கவுரங்கள், குடும்ப பின்னணிகள் குறித்து பகிர்ந்து கொண்டனர். அனைவரும் 70 வயதைக் கடந்திருந்தாலும் அதே பழைய துள்ளலோடு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.
பங்கேற்ற அனைவருக்கும், நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, முன்னாள் மாணவர்கள் சார்பில், நலிவுற்ற முதியவர்களுக்கு உதவித் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டது.
கல்லூரி கட்டடத்தின் பின்னணியில், குழு புகைப்படம் எடுத்துக் கொண்டு, பிரிய மனமில்லாமல் பிரிந்து சென்றனர்.