/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மூடப்பட்ட ஐ.டி., நிறுவன ஊழியர்களுக்கு பாதி சம்பளம்; இன்று அடுத்தகட்ட போராட்ட அறிவிப்பு
/
மூடப்பட்ட ஐ.டி., நிறுவன ஊழியர்களுக்கு பாதி சம்பளம்; இன்று அடுத்தகட்ட போராட்ட அறிவிப்பு
மூடப்பட்ட ஐ.டி., நிறுவன ஊழியர்களுக்கு பாதி சம்பளம்; இன்று அடுத்தகட்ட போராட்ட அறிவிப்பு
மூடப்பட்ட ஐ.டி., நிறுவன ஊழியர்களுக்கு பாதி சம்பளம்; இன்று அடுத்தகட்ட போராட்ட அறிவிப்பு
ADDED : ஜன 30, 2025 07:40 AM

கோவை; கோவையில் மூடப்பட்ட ஐ.டி.,நிறுவன பணியாளர்களுக்கு, முழு சம்பளம் வழங்குவதாக அறிவித்துவிட்டு, பாதி சம்பளம் வழங்கியதால், பணியாளர்கள் கொதிப்படைந்துள்ளனர். அடுத்த கட்ட போராட்டத்துக்கு தாவ, முடிவு செய்துள்ளனர்.
கோவை ஆர்.எஸ்.புரம் தடாகம் சாலையில், இயங்கி வந்த 'போக்கஸ் எஜுமேட்டிக் ' என்ற ஐ.டி., நிறுவனத்தில், சுமார் 3,000 பேர் பணிபுரிந்து வந்தனர். சில தினங்களுக்கு முன், இந்நிறுவனம் திடீரென மூடப்பட்டது. நிவாரணம் கோரி கலெக்டர் அலுவலகத்தையும், தொழிலாளர் துறை அலுவலகத்தையும், பணியாளர்கள் முற்றுகையிட்டனர்.
இதையடுத்து, தொழிலாளர் துறை உதவி கமிஷனர் ராஜ்குமார் (சமரசம்) முன்னிலையில் சி.ஐ.டி.யு., தொழிற்சங்க மாநில பொதுசெயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஐ.டி., பணியாளர்கள் ஐந்து பேர் கொண்ட குழுவினர் முன்னிலையில், அமெரிக்காவிலுள்ள 'போக்கஸ் எஜுமேட்டிக் பிரைவேட் லிட்' நிறுவன நிர்வாகிகளுடன், பல கட்ட பேச்சு நடந்தது. அதில் உடன்பாடு ஏற்பட்டது.
அதன்படி ஜன.,31க் குள் அனைவருக்கும் ஜனவரி மாதத்திற்கான சம்பளத்தை வழங்குவது என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று மாலை வரை, சுமார் 300 பேருக்கு பாதிச்சம்பளமும், பலருக்கு 10,000 ரூபாய் குறைவாகவும், சிலருக்கு 5,000 ரூபாய் குறைவாகவும் பணியாளர்களின் வங்கிக்கணக்கில், டெபாசிட் செய்யப்பட்டிருந்தது.
அதிர்ச்சியடைந்த பணியாளர்கள் அனைவரும் இணைந்து, நேற்று மாலை 6:00 மணிக்கு தொழிலாளர்துறை அலுவலகத்தில் திரண்டனர். அங்கு தொழிலாளர்துறை உதவி கமிஷனர் ராஜ்குமாரிடம் (சமரசம்) முறையிட்டனர்.
அவர்கள், அமெரிக்காவிலுள்ள அந்நிறுவன தலைமை நிர்வாகிகளிடம் பேசினர். அப்போது ஒவ்வொரு பணியாளரின் வருகையின் அடிப்படையிலும், அவர்கள் பணிபுரிந்த நேரத்தின் அடிப்படையிலுமே, சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
அதில் குறை இருந்தால், எழுத்துப்பூர்வமாக தெரிவித்தால் பரிசீலிப்பதாக தெரிவித்தனர். இதனால் கொதிப்படைந்த பணியாளர்கள், அடுத்த கட்ட போராட்டத்துக்கு தாவ முடிவு செய்துள்ளனர்.