/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குமரன் கல்லூரியில் கைத்தறி தின விழா
/
குமரன் கல்லூரியில் கைத்தறி தின விழா
ADDED : ஆக 06, 2025 09:26 PM

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில் உள்ள, ஸ்ரீ குமரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கைத்தறி தின விழா கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு கல்லூரி முதல்வர் சுகுணா தலைமை வகித்து பேசுகையில்,கைத்தறி தொழிலை மேம்படுத்தும் வகையில், கைத்தறி ஆடைகளை மாணவ-மாணவிகள் அதிகளவில் பயன்படுத்த வேண்டும். இதனால் கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரம் மேம்படும், என்றார். விழாவில் மாணவ, மாணவியர் கலாசாரங்களை பிரதிபலிக்கும் விதமாக, பல்வேறு வகையான பாரம்பரிய ஆடைகளை அணிந்து வந்தனர். கல்லூரியில் நடந்த போட்டியில் முதலாம் ஆண்டு கம்ப்யூட்டர் அறிவியல் துறை மாணவி கீர்த்தனா முதலிடத்தையும், வணிகவியல் துறை மாணவர் கரன் இரண்டாம் இடத்தையும் பெற்றனர். இவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் மாணவ, மாணவியர், பேராசிரியர்கள், பங்கேற்றனர்.