/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அதிவிரைவுப்படை வீரர்கள்‛'ராக்கி' அனுப்பி மகிழ்ச்சி
/
அதிவிரைவுப்படை வீரர்கள்‛'ராக்கி' அனுப்பி மகிழ்ச்சி
அதிவிரைவுப்படை வீரர்கள்‛'ராக்கி' அனுப்பி மகிழ்ச்சி
அதிவிரைவுப்படை வீரர்கள்‛'ராக்கி' அனுப்பி மகிழ்ச்சி
ADDED : ஜூலை 31, 2025 10:03 PM

கோவை; அதிவிரைவுப்படை வீரர்கள் சிலர், தங்கள் ஊரில் உள்ள சகோதரிகளுக்கு, தபால் நிலையம் வாயிலாக ராக்கி கயிறு அனுப்பி வைத்தனர்.
கோவை -- வெள்ளலுார் செல்லும் வழியில் மகாலிங்கபுரத்தில், அதிவிரைவுப்படை முகாம் உள்ளது. இங்குள்ள வடமாநிலத்தை சேர்ந்த வீரர்கள், ஆண்டுதோறும் ரக் ஷா பந்தன் தினத்தையொட்டி, தங்கள் ஊரில் உள்ள சகோதரிகள், உறவினர்களுக்கு ராக்கி கயிறு, தபால் வாயிலாக அனுப்புவது வழக்கம்.
தற்போது, வரும் 9ம் தேதி ரக் ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், மும்பை ஆகிய பகுதிகளை சேர்ந்த வீரர்கள் பலர், தங்கள் சகோதரி, உறவினர்களுக்கு, வெள்ளலுார் தபால் நிலையத்தில் இருந்து, நேற்று ராக்கி கயிறு அனுப்பினர்.
போஸ்ட் மாஸ்டர் தண்டாயுதபாணி, இதை பெற்றுக் கொண்டார். இது வருடந்தோறும் தங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக, அதிவிரைவுப் படை வீரர்கள் தெரிவித்தனர்.