/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இன்றைய பொழுது இனிதாய் கழியட்டும்
/
இன்றைய பொழுது இனிதாய் கழியட்டும்
ADDED : ஜூலை 13, 2025 12:31 AM
சாதுர்மாஸ்ய விரத மகோற்சவம்
ராம்நகர், ஸ்ரீ கோதண்டராமர் கோவிலில், மகா திரிபுரசுந்தரி சமேத சந்திரமவுலீஸ்வர பூஜை, காலை, 9:30 மணி முதல் நடக்கிறது. காலை, 11:00 மணிக்கு, தீர்த்த பிரசாதம், பிக்சாவந்தனம் நடக்கிறது. பிலாஸ்பூர், சக்ர மகாமேரு பீடம், ஸ்ரீ சச்சிதானந்த தீர்த்த மகாசுவாமிகள் பங்கேற்கிறார்.
கும்பாபிஷேக விழா
வேடப்பட்டி, வேதமாதா காயத்ரி தேவி கோவிலில், கும்பாபிஷேக விழா, காலை, 9:30 முதல் 10:30 மணிக்குள் நடக்கிறது.
* ராமநாதபுரம், சிவராம் நகரில் உள்ள நடராஜ் நகர் லே அவுட்டில், பிரசன்ன விநாயகர், பார்வதி பரமேஸ்வரன் கோவிலில், காலை,7:00 மணிக்கு கும்பாபிஷேக விழா நடக்கிறது.
ஆன்மிக சொற்பொழிவு
பாரதீய வித்யா பவன் சார்பில், வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமியின் சொற்பொழிவுகள், ஆர்.எஸ்.புரம், பவன் வளாகத்தில் நடந்து வருகிறது. காலை, 'அமலனாதிபிரான்' என்ற தலைப்பிலும், மாலை, 6:30 மணிக்கு, 'சரணாகதி' என்ற தலைப்பிலும் உரையாற்றுகிறார்.
'அக்ரி இன்டெக்ஸ்' கண்காட்சி
அக்ரி இன்டெக்ஸ் வேளாண் வர்த்தக கண்காட்சி, கோவை கொடிசியாவில் நடந்து வருகிறது. கொடிசியா வளாகத்தில், 450க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் சார்பில், 600 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலை, 10:00 முதல் மாலை, 6:00 மணி வரை கண்காட்சியை பார்வையிடலாம்.
ஓவியக்கண்காட்சி
கஸ்துாரி சீனிவாசன் அறநிலையம் சார்பில், 227வது ஓவியக்கண்காட்சி, அவிநாசி ரோடு, கஸ்துாரி சீனிவாசன் கலைமையத்தில் நடந்து வருகிறது. கோவை ஓவியர் மதிநிறைச்செல்வன் தனது படைப்புகளை காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கிறார். காலை, 10:00 முதல் இரவு, 7:00 மணி வரை, ஓவியங்களை பார்வையிடலாம்.
விதைத்திருவிழா
இயல்வாகை அமைப்பு சார்பில், கோவையில் விதைத்திருவிழா, பவர்ஹவுஸ், கிராஸ்கட் ரோடு, மாநகராட்சி பள்ளியில், காலை, 10:00 முதல் மாலை, 4:00 மணி வரை நடக்கிறது. நம்ம ஊரு சந்தையும், ஆயுதம் அமைப்பின் பாரம்பரிய கலை நிகழ்வுகள், பாரம்பரிய அரிசி தானியங்களின் சுவையான உணவு வகைகளும் இடம்பெறுகின்றன.
இலக்கியச் சந்திப்பு
கோவில்பாளையம், கவையன்புதுார் தமிழ்ச் சங்கம் சார்பில், 74வது மாத அமர்வு, எஸ்.எஸ்., குளம், விவேகானந்தா மேலாண்மைக் கல்லுாரியில், காலை, 9:30 மணிக்கு நடக்கிறது. இலக்கிய ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் பலர் கலந்துகொள்கின்றனர்.
சமஸ்கிருத வகுப்புகள்
ராம்நகர், ஸ்ரீ கோதண்டராமசுவாமி தேவஸ்தானம் மற்றும் சமஸ்கிருத வித்யாஸ்ரீ சார்பில், சமஸ்கிருத வகுப்புகள் நடக்கின்றன. காலை, 10:15 மணி முதல் மதியம், 1:15 மணி வரை, சமஸ்கிருத மொழி, பகவத்கீதை, ஸ்லோகங்கள் கற்பித்து தரப்படுகிறது.
அமைதியின் அனுபவம்
தியானம், அன்பு பகிர்தல், இயற்கை, நேர்மறை எண்ணம் ஆகியவற்றின் மூலம் மன அமைதியை அனுபவிக்கலாம். அண்ணாசாலை எதிரில், ஓசூர் ரோட்டில் அமைந்துள்ள, ஆருத்ரா ஹாலில், இலவச வீடியோ சத்சங்கம் நடக்கிறது. 'நம்முள் அமைதியின் அனுபவம் சாத்தியமே' என்ற தலைப்பில், காலை, 11:00 மணிக்கு, சத்சங் நடக்கிறது.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், சுண்டக்காமுத்துார், டி.எஸ்.நர்சரி பள்ளியில், காலை, 10:30 முதல் மதியம், 12:00 மணி வரை நடக்கிறது. குனியமுத்துார், டிவைன் மேரி சர்ச்சில், மாலை, 6:30 முதல், இரவு, 8:30 மணி வரை நடக்கிறது.