/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுற்றுச்சுவர் இல்லாத சுகாதார நிலையம்; கேள்விக்குறியானது பாதுகாப்பு!
/
சுற்றுச்சுவர் இல்லாத சுகாதார நிலையம்; கேள்விக்குறியானது பாதுகாப்பு!
சுற்றுச்சுவர் இல்லாத சுகாதார நிலையம்; கேள்விக்குறியானது பாதுகாப்பு!
சுற்றுச்சுவர் இல்லாத சுகாதார நிலையம்; கேள்விக்குறியானது பாதுகாப்பு!
ADDED : மார் 31, 2025 09:51 PM

குப்பையை அகற்றணும்
பாசனத்திற்காக தண்ணீர் செல்லும் உடுமலை வெஞ்சமடை கால்வாய் ஷட்டரில், குப்பை தேங்கியுள்ளது. இதனால், தண்ணீர் செல்வது பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த குப்பையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- செல்வம், உடுமலை.
பராமரிக்கவில்லை
உடுமலை பைபாஸ் ரோட்டிலுள்ள சுகாதார வளாகம் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. துாய்மை இல்லாமல் இருப்பதால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர். மேலும், சுகாதார வளாகன் கட்டடத்தின் மேற்கூரை சிதிலமடைந்து இருப்பதால் பாதுகாப்பில்லாமலும் உள்ளது. நகராட்சி நிர்வாகம் முறையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- இலக்கியா, உடுமலை.
சுற்றுச்சுவர் இல்லை
உடுமலை போடிபட்டியில், அரசு துணை சுகாதார நிலையம் உள்ளது. இங்கு சுற்றுச்சுவர் இல்லாததால், பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்களும் இங்கு செல்வதற்கு தயக்கம் காட்டுகின்றனர். எனவே, இங்கு சுற்றுச்சுவர் கட்ட சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சங்கரன், உடுமலை.
சுகாதாரம் பாதிப்பு
உடுமலை ஏரிப்பாளையம் ரோட்டிலுள்ள அரசு பள்ளி வளாகத்தின் முன் குப்பைக்கழிவுகள் கொட்டப்படுகிறது. தொடர்ந்து பள்ளியையொட்டி கழிவுகள் கொட்டப்பட்டு, அப்பகுதி குப்பை கிடங்காகவே மாறிவிட்டது. தற்போது மழைபெய்தால் கழிவுகளில் மழைநீர் தேங்கி மிகுதியான துர்நாற்றம் வீசுகிறது. பள்ளி வளாகத்தில் இதனால் கொசுத் தொல்லையும் அதிகரிக்கிறது. மாணவர்களுக்கு நோய்பரவும் சூழலும் ஏற்படுகிறது.
- தியாகராஜ், உடுமலை.
தெருவிளக்குகள் எரிவதில்லை
பெரியகோட்டை, காந்திநகர் இரண்டாவது வீதியில் தெருவிளக்குகள் முறையாக எரிவதில்லை. மாலை நேரங்களில் அப்பகுதியில் இருள் சூழ்ந்துள்ளது. அப்பகுதியில் ரோடு குண்டும் குழியுமாக இருப்பதால் இரவு நேரங்களில் வாகன ஓட்டுநர்கள் அவ்வழியாக வரும் சமயங்களில் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர்.
- மாரியம்மாள், பெரியகோட்டை.
போக்குவரத்து பாதிப்பு
வால்பாறை புது பஸ் ஸ்டாண்ட் அருகே, ரோட்டின் நடுவில் கட்டுமானப் பணிகளுக்கான மணல் கொட்டப்பட்டுள்ளது. இதனால் அவ்வழியில் செல்லும் வாகன ஓட்டுநர்கள் பயணிக்க பெரும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, ரோட்டில் இருக்கும் மணலை அகற்றம் செய்ய வேண்டும்.
-- பிரபு, வால்பாறை.
வேகத்தடை வேண்டும்
பொள்ளாச்சி, மாப்பிள்ளைக்கவுண்டன்புதூர் ராமபட்டணம் பிரிவு பகுதியில் அடிக்கடி விபத்து நடக்கிறது. இரவு நேரத்தில், வாகன ஓட்டுனர்கள் அதிகளவு தடுமாற்றம் அடைந்து மெதுவாக செல்கின்றனர். வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி, நெடுஞ்சாலை துறை சார்பில் இங்கு வேகத்தடை அமைக்க வேண்டும்.
-- அப்துல், பொள்ளாச்சி.
ரோட்டில் பள்ளம்
பொள்ளாச்சி, பாலகோபாலபுரம் செல்லும் ரோடு, அன்சாரி வீதி சந்திப்பு அருகே, ரோட்டில் பெரிய அளவிலான பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், அவ்வழியில் செல்பவர்கள் சிரமத்துடன் பயணிக்கின்றனர். இதை நகராட்சி நிர்வாகம் கவனித்து சீரமைக்க வேண்டும்.
-- டேவிட், பொள்ளாச்சி.
கரடு முரடான ரோடு
கிணத்துக்கடவு மயானம் செல்லும் ரோட்டின் வளைவு பகுதி சேதமடைந்து, கற்களாக இருப்பதால் வாகன ஓட்டுநர்கள் தடுமாறி செல்கின்றனர். எனவே, பேரூராட்சி நிர்வாகம் சார்பில், இந்த ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- ராஜ், கிணத்துக்கடவு.
ரோட்டில் கழிவு நீர்
பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் கழிப்பிட கழிவு நீர் ரோட்டில் வழிந்தோடுவதால், அப்பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள் ரோட்டில் செல்ல பெரும் சிரமம் ஏற்படுவதுடன், கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, நகராட்சி நிர்வாகம் இதை கவனித்து உடனடியாக சீரமைக்க வேண்டும்.
-- வெங்கடாச்சலம், பொள்ளாச்சி.

