/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டெங்கு காய்ச்சல் பாதிப்பில்லை சுகாதாரத்துறையினர் தகவல்
/
டெங்கு காய்ச்சல் பாதிப்பில்லை சுகாதாரத்துறையினர் தகவல்
டெங்கு காய்ச்சல் பாதிப்பில்லை சுகாதாரத்துறையினர் தகவல்
டெங்கு காய்ச்சல் பாதிப்பில்லை சுகாதாரத்துறையினர் தகவல்
ADDED : டிச 11, 2025 05:05 AM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதியில் சீதோஷ்ண நிலை மாற்றம் ஏற்பட்டிருந்தாலும், 'டெங்கு', 'ப்ளூ' காய்ச்சல் பாதிப்பு இல்லை, என, சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி நகரில், பருவநிலை மாற்றம், திட்டமிடப்படாத திடக்கழிவு மேலாண்மை காரணமாக, கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது.
குறிப்பாக, கடந்த சில மாதங்களாக தொடர்ந்த மழையால், உள்ளாட்சி அமைப்புகள்தோறும், வழக்கமான நோய்த்தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, சுகாதாரத்துறையினர் வாயிலாக, காய்ச்சல் அறிகுறிகளுடன் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு வருவோர் விபரங்கள் சேகரிக்கப்படுகிறது.
நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என, உள்ளாட்சி அமைப்புகள்தோறும், கொசு ஒழிப்பு நடவடிக்கை, குடிநீரில் குளோரின் கலப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்பேரில், பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், தற்போது வரை, டெங்கு, ப்ளூ உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்பு இல்லை.
வழக்கமான எண்ணிக்கை அடிப்படையிலேயே, காய்ச்சல் நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறையினர் கூறியதாவது:
கடந்த சில நாட்களுக்கு முன் பரவலாக மழை பெய்தது. தற்போது, வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், நீர் தேக்க பகுதிகளில் வறண்டு காணப்படுகின்றன.
டெங்குவை பரப்பும் ஏ.டி.எஸ்., வகை கொசுக்கள், தேங்கும் நீரில் முட்டையிட்டு இன பெருக்கமடைவது குறைந்துள்ளது. இதனால், டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைந்துள்ளது.
பாத்திரங்கள், டயர்கள், தொட்டிகளில் தண்ணீர் சேமித்து வைப்பதை தவிர்ப்பது, கொசு வலைகள் பயன்படுத்துவது, ஜன்னல், கதவுகளில் கொசு வலை போடுவது, பகல் நேரங்களில் பூச்சியை விரட்டும் கிரீம்கள், தெளிப்பான்களை பயன்படுத்தலாம். சீதோஷ்ண நிலை மாற்றம் காரணமாக, காய்ச்சல் பாதிப்பும் அதிகரிக்கவில்லை.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

