/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓட்டுநர், நடத்துனர்களுக்கு இதய பரிசோதனை
/
ஓட்டுநர், நடத்துனர்களுக்கு இதய பரிசோதனை
ADDED : அக் 29, 2025 11:55 PM

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் நடத்துனர்கள், ஓட்டுநர்களுக்கு இலவசமாக இதய பரிசோதனை முகாம் நடைபெற்றது.
திருப்பூர் காந்திநகர் ரோட்டரி மற்றும் காரமடை ரோட்டரி சங்கம் ஆகியோருடன் ரேவதி மெடிக்கல் சென்டர், கிரசர் உரிமையாளர்கள் சங்கம் ஆகியவை இணைந்து ஓட்டுனர், நடத்துனர்களுக்கு இலவச இதய மற்றும் நுரையீரல் பரிசோதனை முகாம், மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்றது.
இதற்கு காரமடை ரோட்டரி சங்கத் தலைவர் குமணன் நடராஜன் தலைமை தாங்கினார். மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் சத்யகுமார், ரோட்டரி சங்கம் மண்டல ஒருங்கிணைப்பாளர் சிவ சதீஷ் குமார், தொழிலதிபர்கள் நந்தகுமார், ரூபா சதீஷ், உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி சங்க கோவை மாவட்ட திட்ட அலுவலர் ஞானசேகரன் முகாமை துவக்கி வைத்தார்.
முகாமில் காரமடை வட்டாரத்தில் உள்ள தனியார் பள்ளிகள், கல்குவாரிகளில், பேருந்துகள், லாரிகளை ஓட்டி வரும் சுமார் 200க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள், நடத்துனர்கள் கலந்து கொண்டனர்.
இவர்களுக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம், இ.சி.ஜி., எக்கோ, நுரையீரல் சம்பந்தப்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றனர்.---

