/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஹெல்மெட் அணிய விழிப்புணர்வு பிரசாரம்
/
ஹெல்மெட் அணிய விழிப்புணர்வு பிரசாரம்
ADDED : பிப் 12, 2024 11:08 PM

அன்னுார்;சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரசாரம் அன்னுாரில் நேற்று நடந்தது.
நெடுஞ்சாலைத்துறை சார்பில், ஜன.,15ம் தேதி முதல், பிப்.,14ம் தேதி வரை, தேசிய சாலை பாதுகாப்பு மாதம் கடைப்பிடிக்கப்பட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடக்கிறது. நேற்று அன்னுார் பஸ் ஸ்டாண்ட் முன்புறம், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.
இருசக்கர வாகனத்தில் வருவோர் கண்டிப்பாக ஹெல்மெட் அணியும்படி அறிவுறுத்தப்பட்டனர். காரில் செல்வோர், சீட் பெல்ட் அணியும்படி தெரிவிக்கப்பட்டது. குறைந்த வேகத்தில் செல்வோர் சாலையில் இடது புறமாக செல்லும்படியும், சாலை விதிகளை மதித்து நடக்கும்படியும் எதிரில் சாலை தெரியாமல் இருந்தால் வாகனங்களை முந்த வேண்டாம் எனவும் வாகன ஓட்டிகளுக்கு நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், ஊழியர்கள், அறிவித்தனர்.