தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி


UPDATED : நவ 14, 2026 07:44 PM

ADDED : நவ 14, 2026 07:38 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 14, 2026 07:44 PM ADDED : நவ 14, 2026 07:38 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: மாநகர போலீஸ், உயிர் அமைப்பு, ஹோண்டா நிறுவனம் சார்பில்,ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி பி.ஆர்.எஸ். மைதானத்தில் நடந்தது.

இதில் கலெக்டர் பவன்குமார் பேசியதாவது: தமிழகத்தில் கடந்தாண்டு, 21 லட்சம் புதிய வாகனப் பதிவு நடந்தது. இதில், 70 சதவீதம் பைக்குகள்.

வாகனங்கள் அதிகளவில் பெருகி வருவதால் விபத்து அதிகரிக்கின்றன. இதைத்தவிர்க்க அனைவரும் போக்குவரத்து விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். கோவையில் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு விபத்துக்கள், உயிரிழப்புகள் குறைந்துள்ளன. என்றார்.

கோவை மாநகர போலீஸ் கமிஷனர்(பொறுப்பு) ரம்யாபாரதி, மாநகராட்சி கமிஷனர் ரவிதேஜா, ஹோண்டா நிறுவன செயலாக்க அலுவலர் ராஜீவ் தனேஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஹோண்டா நிறுவனம் சார்பில் மாநகர போலீசாருக்கு 34 அவசர மீட்பு வாகனம் வழங்கப்பட்டது. பேரணியில் மாநகர போலீசார் புதிதாக வழங்கப்பட்ட பைக்குகளில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us