ADDED : நவ 14, 2026 07:44 PM

அ நிறம் | அளவு
கோவை: உலக நீரிழிவு தினம் இன்று (நவ.,14) மாநகராட்சி சுகாதாரப்பிரிவு சார்பில் செம்மொழி பூங்காவில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
ஆரம்ப சுகாதார நிலையங்களிலுள்ள டாக்டர்கள், நர்ஸ்கள் 15 குழுவாக பிரிந்து சமையல் செய்தனர். காய்கறி, பழங்கள், சிறுதானியங்களை பயன்படுத்தி சமைத்தனர். அரிசிக்கு பதிலாக அவல் பயன்படுத்தப்பட்டது.
ராகி தோசை, முருங்கை துவையல், வாழைத்தண்டு சாலட், அவல் புளி சாதம் உள்ளிட்ட உணவு செய்யப்பட்டன. இந்த உணவுகள் மூலம் நீரிழிவு நோய் பாதித்தவர்களின் ஆரோக்கியம் மேம்படும் என கூறினர்.
விழிப்புணர்வுக்காக சிறப்பு கலை நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக மழைநீர் சேகரிப்பு அமைப்பு தொடர்பாக, பிரமாண்ட ரங்கோலி கோலம் காட்சிபடுத்தியிருந்தனர்.
